Tuesday 30 August 2016

Muyal Valarpu Rabbit Farming Tamilnadu

Muyal Valarpu | Rabbit Farming | Muraigal In Tamil | Pannai | Kuttigal Virpanai | Kutti For Sale In Tamilnadu | Chennai

முயல் வளர்ப்பு முறைகள்  | பயிற்சி | வளர்ப்பது எப்படி | குட்டிகள் | கூண்டு | பண்ணை | விற்பனை | வளர்ப்பு கூண்டு

Muyal Valarpu | Rabbit Farming | Muraigal In Tamil | Pannai | Kuttigal Virpanai |  Kutti For Sale In Tamilnadu | Chennai  



Star Global Agri Farms
ஒரு சிறிய பண்ணை அமைக்க 
ஒரு யூனிட் முயல் [ 7 பெண் முயல் , 3 ஆண் முயல் ] விலை ரூ.10,000
                 
வீட்டில் முயல் வளர்க்க 
 ஒரு ஜோடி (ஓரு ஆண் ,ஒரு பெண் முயல்) தேவை என்றால் 
தமிழகம் முழுவதும் SETC பஸ் மூலம் அட்டை பெட்டியில் அனுப்பப்படும்.


** 3 மாதகுட்டிகள் (ஓரு ஆண் ,ஒரு பெண்)ரூ.1600
*சினை பருவ குட்டிகள் (ஓரு ஆண் ,ஒரு பெண்)ரூ.2100

வளர்ந்த முயல்களை கிலோ  ரூ .180 என்ற விலையில் நாங்களே திரும்ப பெற்றுக்கொள்கிறோம் .
Star Global Agri Farms
பண்ணை அமைந்துள்ள இடங்கள் 
1)தருமபுரி ,பாரதிபுரம்

2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை 

3)ஈரோடு,பள்ளிபாளையம் .

*3 மாதங்களுக்கு 1 ஈற்று
*ஒரு ஈற்றுக்கு 8 குட்டிகள்
*3 மாதத்தில் 2 கிலோ எடை
*உயிர் எடைக்கு கிலோ 180 ரூபாய் 
விவசாய உபதொழில்களில் முக்கியமானது கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து லாபம் பார்த்து வரும் விவசாயிகள் அநேகம் பேர் உள்ளனர். அவற்றில் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் பண்ணைத் தொழிலில் முயல் வளர்ப்பும் அடங்கும். தற்போது, முயல் வளர்ப்பும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்... முயல் வளர்த்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ள வேடல் கிராமத்தை சேர்ந்த சுந்தரகாளத்தி.  

தன்னுடைய ‘மகேஸ்வரி அம்மாள் முயல் பண்ணையில்’, முயல்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்த சுந்தரகாளத்தியிடம் பேசினோம்.
மூன்று மாதங்களில் 3 கிலோ!

முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும் போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.

வலை கவனம்!

கொட்டகைக்கு அதகிச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை. அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக  கூண்டு செய்யாமல், பத்தடி நீளம். நான்கடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு ‘நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது. 

ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!

சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!

முயல், ஐந்து மாத வயதில் பருவத்திற்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.ஆணுடன் சேர்ந்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 8 முறை குட்டி!

குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை வந்துவிடும்.

பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!

முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும். முயல்கள் பகல்வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு 210 முயல்கள்!

ஒவ்வொரு முயலும் சராசரியாக வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக 5 குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும்  ஏழு பெண் முயல்கள் மூலமாக வருடத்திற்கு 210 குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் கழித்து விற்கும்போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். சராசரியாக ஒரு கிலோவிற்கு 175 ரூபாய் விலை கிடைக்கிறது. ஒரு முயல் 350 ரூபாய் என்று 210 முயல்களையும் விற்கும்போது.. 73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம். இது, பத்து முயல்கள்  அடங்கிய  ஒரு யூனிட்டிற்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதில் லாபம் குறைவாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இதில் பராமரிப்பு குறைவு. அதாவது, இதற்காக நீங்க செலவிடும் நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாகவே இதைச் செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

5 யூனிட்டால்... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினால், வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட  விற்க முடியும் என்றார். 

இப்படித்தான் அடர்தீவனம் தயாரிக்கணும்.

மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமை தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு  அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருக்கின்றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் கறியில் உள்ள சத்துக்கள்!

புரதம் - 21%, கொழுப்பு - 11%, நீர்ச்சத்து -68%. 100 கிராம் கறியில்.. 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.

10 முயல்கள் வளர்க்க முரளிதரன் சொல்லும் ஒரு வருடத்திற்கான செலவு – வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
நிரந்தரச் செலவுகள் (5 ஆண்டுகளுக்கு)

தாய் முயல்
10,000
கூண்டு
8,000
மொத்தம்
18,000
நடைமுறைச் செலவுகள்
அடர் தீவனம்
44,900
பசுந்தீவனம்
2,600
மருத்துவச் செலவு
5,300
முயல் விற்பனை மூலம் வரவு
73,500
மொத்தம்
52,800
73,500
நிகர லாபம்
20,700

அப்போ நெசவு... இப்போ முயல்!


“எனக்குச் சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற பிள்ளையார் பாளையம். பரம்பரை, பரம்பரையா நெசவுதான் எங்க குடும்பத் தொழில். ஏழு வயசுல இருந்து நெசவுத் தொழில் செய்துட்டு இருக்கேன். நெசவுத்தொழில் முன்ன மாதிரி இல்லை. அதுல வர்ற வருமானம் போதாததால வேற தொழில் ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன். நண்பர்கள்கிட்ட பேசினப்போ,  முயல் வளர்ப்பு சொன்னாங்க. உடனே, ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்துல முயல் வளர்ப்பு குறித்து பயிற்சி எடுத்தேன். ஒரு நண்பர்கிட்ட இருந்து ரெண்டு முயல்களை வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன். அதுல கொஞ்சம் அனுபவம் கிடைக்கவும் 96-ம் வருஷம் ஐந்து  முயல்களை வைச்சு பண்ணை ஆரம்பிச்சேன். அப்புறம் படிப்படியா முயல்களைப்  பெருக்கிட்டேன்.  



பண்ணையைப் பெருக்குனதுக் கப்பறமும் நான் பயிற்சிகள்ல கலந்துக்கிறதை நிறுத்தலை. ஒருமுறை, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்துல சந்தை வாய்ப்பு, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை குறித்து தெரிஞ்சுக்குறதுக்காகப் போனேன். அங்க இருந்த பேராசியர்கள் டாக்டர்.குமரவேல் சாரும்,  டாக்டர் கரு.பசுபதி சாரும் என்னோட ஆர்வத்தைப் பார்த்து ரொம்பவே உதவி பண்ணுனாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையிலதான் வெற்றிகரமா பண்ணையை நடத்த முடியுது” என்று முன்னுரை கொடுத்த சுந்தரகாளத்தி, தொடர்ந்தார்.




ஆரம்பிக்கும்போது 5  இப்போ 83! 


“ஆரம்பத்தில்  நான்கு பெண் முயல்கள், ஒரு ஆண்முயல் வைச்சுதான் ஆரம்பிச்சேன். அப்பறம் முயல்கள் பெருகப் பெருக... 600 சதுர அடியில தகர கொட்டகை அமைச்சிட்டேன். 2 அடிக்கு 2 அடி அளவுல 11 இரும்பு கூண்டுகள் இருக்கு. ஒவ்வொரு கூண்டுலயும்  4 அறைகள் இருக்கும். அதுலதான் முயல்களை வளர்க்கிறேன்.  இப்போ எங்கிட்ட 27 பெண் முயல்கள், 9 ஆண் முயல்கள்னு மொத்தம் 36 பெரிய முயல்கள் இருக்கு. தவிர, 47 குட்டி முயல்களும் இருக்குது. நியூசிலாந்து ஒயிட், சோவியத் சின்சில்லா, ஒயிட்  ஜெயன்ட், க்ரே  ஜெயன்ட், நியூசிலாந்து ஒயிட் அண்ட் பிளாக், டச்சு... னு 7 வகை முயல்களை வளர்க்கிறேன்” என்ற சுந்தரகாளத்தி வருமானம் குறித்துச் சொன்னார். 



 மாதம் 60 குட்டிகள்! 



“ஒரு முயல் ஒரு ஈத்துக்கு 6 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். சரியான பருவத்துல இணை சேர்த்துட்டா  75  நாளுக்கு ஒரு முறை குட்டிகள் கிடைச்சுட்டே இருக்கும். ஆனா, பருவம் வர்றதுக்கும், இணை சேர்றதுக்கும் சில நாள் முன்னபின்ன ஆகலாம். அதனால ஒரு சுற்றுக்கு மூணு மாசம்னு கணக்கு வெச்சுக்கலாம். என்கிட்ட இருக்குற 27 தாய் முயல்கள் மூலமா சராசரியா மாசத்துக்கு 60 குட்டிகள் கிடைச்சுட்டுருக்கு. குட்டிகளை 3 மாசம் வளர்த்து விற்பனை செய்வேன். 3 மாசத்துல ஓவ்வொரு குட்டியும் சராசரியா 2 கிலோ எடை வந்துடும். குட்டிகள் வளர்றப்பவே... மந்தமா இருக்குற குட்டிகளை இறைச்சிக்குனும், துறுதுறுனு இருக்குற குட்டிகளை வளர்ப்புக்குனும் பிரிச்சு வெச்சுடுவேன். பெரும்பாலும் உயிர் எடைக்கணக்குலதான் விற்பனை செய்றேன். ஒரு கிலோ உயிர் எடைக்கு 200 ரூபாய்னு விலை கிடைக்கும். 60 குட்டிகள் 120 கிலோ எடை இருக்கும். அதை விற்பனை செய்றது மூலமா மாசம் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். பசுந்தீவனம், அடர் தீவனம், போக்குவரத்து, சத்து டானிக், மருந்துகள்...னு எல்லாச் செலவும் போக 18 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். இறைச்சியா விற்பனை செய்தா இன்னமும் லாபம் கூடும்” என்ற சுந்தரகாளத்தி நிறைவாக,



குறைந்த இடமே போதும்!


“முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவுதான். வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தாலே போதும். அதுல முயல வளர்த்து நல்ல லாபம் எடுக்க முடியும். என் நண்பர்கள் பல பேர் முயல் வளர்க்கிறாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து இந்த தொழிலை செய்றதால வெற்றிகரமா செய்ய முடியுது. முயல் வளர்ப்புல நல்ல லாபம் எடுக்க முடியுங்கிறதுக்கு நாங்கள்தான் உதாரணம்.” முயல் குட்டிகளை வாஞ்சையுடன்  தடவிக் கொடுத்த படியே சொன்னார்.

காலையில் பசுந்தீவனம், மாலையில் அடர்தீவனம்!


காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 10 மணியளவில்... முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்.... என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது. 


கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத் தவிடு 25 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ, உப்பு  அரை கிலோ எடுத்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாலை 6 மணியளவில் இந்த அடர் தீவனத்தை ஒரு முயலுக்கு 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும் குடிக்கத் தண்ணீரையும் வைக்க வேண்டும்.



கொட்டகை கவனம்!


முயல்களுக்கான கொட்டகைகளை காற்றோட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது. கொட்டகைக்குள் வெளிச்சம் குறைவாக இருக்குமாறு அமைக்க வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைத்தால் வெயில் காலத்தில் தகரக்கூரை மீது தென்னை ஓலைகளை பரப்பி வைக்கலாம்.


மருத்துவ குணமும் உண்டு!


முயல் இறைச்சியில் குறைவான கொழுப்பும், அதிக புரதமும் உள்ளன. அதனால்,  ஆரோக்கியத்துக்கு  ஏற்ற இறைச்சி இது. முயல் இறைச்சிக்கு குடல்புண்,  மலச்சிக்கல் ஆகியவற்றைத் தீர்க்கும் குணமுண்டு. முயல் இறைச்சியில் சோடியம்  குறைவாக உள்ளதால், இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்றது.


ஆண் முயல்களை பிரித்து வைக்க வேண்டும்!


6 மாத வயதில் பெண் முயல் பருவத்துக்கு வரும். 8 மாத வயதில் ஆண் முயல் பருவத்துக்கு வரும். பெண் முயல் இணை சேரும் பருவத்துக்கு வந்து விட்டால்... மூலையில் வலை தோண்டுவது போல கால்களால் பறிக்கும். அமைதியில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த செயல்பாடுகள்  மூலம் கண்டுபிடித்து இணை சேர்க்கலாம். 



பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் விட்டு  இரண்டு நாட்களில் பிரித்து விட வேண்டும். இணை சேரும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆண் முயல்களைத் தனியாக பிரித்துதான் வைக்க வேண்டும். இணை சேர்ந்த 28-ம் நாளில் இருந்து 30-ம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டி ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முயல் தன் ரோமங்களை உதிர்க்க ஆரம்பிக்கும். அந்த ரோமங்களை குவித்து அதன் மீதுதான் குட்டி ஈனும். இந்த அறிகுறியை வைத்து குட்டி ஈனுவதைக் கண்டுபிடிக்க முடியும்.  



எட்டு குட்டிகளுக்கும் அதிகமாகப் பிறந்தால், நாம்தான் ஒவ்வொரு குட்டியாக எடுத்து பாலூட்ட வேண்டும். குட்டிகள் 12-ம் நாள் கண் திறக்கும். அதுவரை ஒரு பெட்டிக்குள் முயலின் ரோமங்களை வைத்து மெத்தை போன்று அமைத்து குட்டிகளை அதன் மீது படுக்க வைக்க வேண்டும். குட்டிகளுக்கு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறந்த 22-ம் நாள் வரை தாய் முயல், குட்டிகளுக்குப் பால் தரும். அதன்பிறகு குட்டிகளே இலைகளை உண்ண ஆரம்பித்து விடும். 45-ம் நாளில் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து விட வேண்டும். அதன்பிறகு தாய் முயலை மீண்டும் இணை சேர்க்கலாம். நான்கு மாத வயதில்தான் பாலினம் கண்டுபிடிக்க முடியும். அந்த சமயத்தில் ஆண், பெண் முயல்களை தனித்தனியாகப் பிரித்து கூண்டுகளில் அடைக்க வேண்டும்.


காதைப்பிடித்து தூக்கக் கூடாது.


முயல்களைப் பெரும்பாலும் காதைப்பிடித்துதான் தூக்குவார்கள். ஆனால், அது தவறு. இடுப்பைப் பிடித்துதான் தூக்க வேண்டும். முயலை அடிக்கடி தூக்கினால் ரோமங்கள் உதிரும். அதனால், தேவையில்லாமல் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.


குடற்புழு நீக்கம் அவசியம்!


முயல்களுக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை... மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தைக் கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முயல்களுக்கு சொறி நோய் தாக்கினால், வேப்பெண்ணெய் தடவ வேண்டும். வேறு நோய்கள் பெரும்பாலும் வராது.



Star Global Agri Farms
ஒரு சிறிய பண்ணை அமைக்க 
ஒரு யூனிட் முயல் [ 7 பெண் முயல் , 3 ஆண் முயல் ] விலை ரூ.10,000

               வீட்டில் முயல் வளர்க்க 
 ஒரு ஜோடி (ஓரு ஆண் ,ஒரு பெண் முயல்) தேவை என்றால் 
தமிழகம் முழுவதும் SETC பஸ் மூலம் அட்டை பெட்டியில் அனுப்பப்படும்.

* 3 மாத குட்டி(ஓரு ஆண் ,ஒரு பெண்)ரூ.1600
*சினை பருவ குட்டிகள் (ஓரு ஆண் ,ஒரு பெண்)ரூ.2100

வளர்ந்த முயல்களை கிலோ  ரூ .180 என்ற விலையில் நாங்களே திரும்ப பெற்றுக்கொள்கிறோம் .
Star Global Agri Farms
பண்ணை அமைந்துள்ள இடங்கள் 
1)தருமபுரி ,பாரதிபுரம்

2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை 

3)ஈரோடு,பள்ளிபாளையம் .

*3 மாதங்களுக்கு 1 ஈற்று
*ஒரு ஈற்றுக்கு 8 குட்டிகள்
*3 மாதத்தில் 2 கிலோ எடை

*உயிர் எடைக்கு கிலோ 180 ரூபாய் 

சுத்தம் முக்கியம்!


கொட்டகையில் சிதறிக்கிடக்கும் தீவனங்கள், கழிவுகளை  தினமும் தவறாமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும், தண்ணீர் வைக்கும் போதும் கிண்ணங்களை சுத்தமாகக் கழுவித்தான் வைக்க வேண்டும். தினமும் முயல்கள் சரியாக சாப்பிடுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

 Rabbit farming in tamil | rabbit farming business plan | want information on rabbit farming| rabbit farming videos | rabbit farming in kerala | rabbit farming pdf |rabbit farming for meat

investment for keeping rabbit farm | start rabbit farm India

1 comment:

  1. Lucky 15 Casino Resort New Jersey – JTA Hub
    Get the 이천 출장샵 latest 양주 출장안마 news and updates 포천 출장마사지 on Lucky 15 Casino Resort New Jersey at JTA Hub 경상북도 출장안마 in New Jersey. Don't miss 김제 출장마사지 out! Click here for your next event!

    ReplyDelete